சிக்கலில் தாம்பத்யம்!
சிக்கலில் தாம்பத்யம்!!! - படித்து பயன் பெறுங்கள் “என் பையனை தலையணை மந்திரம் போட்டு மயக்கிட்டா” என மாமியார்கள் புலம்புவதும், “அவனை முந்தானைல முடிஞ்சுட்டா” என பெண்கள் கிண்டலடிப்பதும் வெகு சகஜம். தாம்பத்யத்தின் தேவையை ஒருவகையில் இந்த வாசகங்களெல்லாம் திரும்பத் திரும்ப உறுதிப் படுத்திக் கொண்டிருக்கின்றன. தாம்பத்யம் உயிர்ப்பாக இருக்கும் காலமெல்லாம் தம்பதியருக்கு ஹனிமூன் காலம் தான். அந்த ஏரியா வீக் ஆகும்போது குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து குவியும். மன அழுத்தத்தை விரட்டும் ஒரு அசத்தலான விஷயம் செக்ஸ் என்கின்றனர் உளவியலார்கள். மணிமேகலையின் கையிலிருக்கும் அமுத சுரபிபோல செக்ஸ் வாழ்க்கை எப்போதும் வற்றாத விஷயமாய் இருப்பதில்லை என்பது தான் சிக்கல். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த விஷயத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டு. குறிப்பாக ஆண்களுக்கு என்ன தான் “விருப்பம்” இருந்தாலும் உடல் ஒத்துழைக்காவிட்டால் தோல்வி தான். ஆண்மைக் குறைவு பல்வேறு காரணங்களில் இருக்கலாம். நோய், மன அழுத்தம், உடல் குறைபாடு, விருப்பமின்மை இப்படி ஏதோ ஒன்று ! இதை வெளியே சொல்வது அவமானம் என பெரும்பாலான ஆண்கள் நினைக்...