மனைவி மீது சந்தேகம் வரலாமா
மனைவி மீது சந்தேகம் வரலாமா Posted on August 11, 2014 by admin in அந்தரங்கம் // 0 Comments ஒரு வீட்டில் சந்தேகம் முன் வாசலால் வந்தால் சந்தோஷம் பின் வாசலால் போய்விடும். ஆம்! இன்று சந்தேகம் என்ற மன வியாதி சமூகத்தில் நிலவி வரும் ஒரு விஷ கிருமி. அது ஊடுருவி உயிரையே கொன்றுவிடும். அதிலும் சந்தேகம், கணவன், மனைவி விடயத்தில் வரவே கூடாது. இன்று பெரும்பாலான தம்பதிகளிடம் நிலவும் விடயமாக இது இருக்கிறது. ஒரு ஒரு கணவன் மனைவி மீதோ, மனைவி கணவன் மீதோ வீணான சந்தேகங்களை உண்டாக்கி கொள்வது குடும்ப வாழ்விற்கு பெரும் ஆபத்தாக அமையும். இல்லற வாழ்க்கையில் சந்தேகம் என்பது தம்பதியருக்கு இடையில் ஏற்படவே கூடாது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். கணவரிடம் மனைவிக்கோ மனைவியிடம் கணவருக்கோ சந்தேகம் ஏற்பட்டால் அந்த வீட்டில் ஷைத்தான் குடியேறிவிடுவான் என்கின்றனர் சான்றோர்கள். இதன் மூலம் பரஸ்பர அன்பு, புரிந்துணர்வு எல்லாமே போய்விடும். பரஸ்பர அன்பு, புரிந்துணர்வு இல்லாத ஒரு குடும்ப வாழ்க்கை, சிறந்த குடும்ப வாழ்க்கையாக இருக்காது. சந்தேகங்கள் உருவாகாமல் இருவரும் நடப்பதும் மிக முக்கியம்...